Posts

ஜன்னல் வானம் ******************** நட்சத்திரப்  பூக்கள்  கொட்டிக் கிடக்கின்றன/ எட்டிப் பார்க்கிறேன் சாளரத்தின் வழியே/ வெள்ளிக் கம்பிகளோடு கரைகிறது இளமை/ விரல் படாத இரவுகளின் தனிமை/ இரவும் பகலும் வெளியேறும் வெப்பமூச்சு/ சுருங்கிப் போகிறது  மற்றவருடன் பேச்சு/ வானிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறான் இராஜகுமாரன்/ பக்கத்தில் வருவானா முத்தம் தருவானா/ கற்பனை காதலனின் முத்தச் சத்தத்தில்/ சிலிர்த்துக் கொள்கிறது கைபடா மேனி/ சுமந்தவள் இன்று சுமை என்கிறாள்/ தளர்ந்த தந்தையோ சாய்வு நாற்காலியில்/ கருத்த நிறத்துக்கு கூடவில்லை மதிப்பு/ கல்யாணச் சந்தையில் விலைபோகா சரக்கு/ கள்ளிப்பால் குடித்திருந்தால் அன்றே மோட்சம் / கன்னியாய் வளர்ந்ததால் கண்ணீர்தான் மிச்சம் / நடுத்தர வயதை தாண்டினாலும் பரவாயில்லை/  நாலாம் தாரமாகவும் நான் தயார்/ நம்பிக்கை சுவர் தகர்ந்து கொண்டிருக்கிறது / சாளரத்து வழியே வாழ்க்கைத் தொடர்கிகிறது. கி.இலட்சுமி.

என் பார்வையில் உறவுகள்

#tccontest2020 உறவுகள் என் பார்வையில் பார்வையில் ************************** நீரின்றி இயங்காது உலகு உறவின்றி இயங்காது உயிரு இந்த உலகில் தொப்புள்கொடி உறவோடு பிறந்தோம். தாய் தந்தை தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி மாமா மாமி எனப் பல்வேறு உறவுகளோடு கொழுந்தென வளர்ந்தோம். பசியைத் தீர்த்து உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த அன்னை..தோளில் சுமந்து இதயத்தில் இடம் கொடுத்த தந்தை..மட்டில்லா மகிழ்வோடு போற்றி வளர்த்த சுற்றம்.. வாழும் வழிமுறைகளைக் கற்றுத் தந்திட்ட கொடிமலர்கள்..வாடாமல் பார்த்துக் கொண்டச் சுற்றம் சுவாசமாய் உயிரில் கலந்திருக்கிறது. முறையோடு காதுகுத்தி மடியில் அமர்த்தி வளர்த்த மாமாவை மறக்க இயலுமா.  நடக்கையில் தவழ்கையில் கைகொட்டி ஊக்கப்படுத்திய உறவுகளின்றி வாழ இயலுமா.. என் வாழ்க்கையின் ஊன்றுகோலாய் இருந்த உறவுகள் காலப்போக்கில் பின்னால் நிற்கின்றனர். நான் முன்னால் நிற்பதைப் பார்த்து ஆனந்தப் படுகின்றனர். காலவட்டம் சுழல்கிறது. எனக்கென்று கிளை விரிந்து மனைவி குழந்தைகள் எனப் புதிய சிறகுகள் முளைக்கின்றன. இப்போது அடிமரமாய் நிற்கிறேன் நான்.என் விரிந்த கிளைகளில் நேசம் தேடும் பறவைகள்.  இதுவரை எனக்
நாயென ஓடியே நலிவுறத் தேடியே பேயெனக் காத்துமே பெருமைகள் தீர்ந்திடா, தாயுமே சேயுமே மனைவியும் பிள்ளையும் தேவையே இன்றியே மழுங்கிடும் புத்தியே !- கலிவிருத்தம். 

First in Blog

அனைவர்க்கும் வணக்கம், நான் உங்கள் லட்சுமி. 😉😉😉